கோவை: காவல்துறையினருக்கு நவீன கேமராக்கள் வழங்கப்பட்டன!

குற்றவாளிகளை கண்டறியவும், பொது மக்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலான சட்டையில் பொருத்தக் கூடிய சிறிய நவீன ரக கண்காணிப்பு கேமராக்கள் கோவை காவல் துறையினருக்கு வழங்கப்பட்டன.
 | 

கோவை: காவல்துறையினருக்கு நவீன கேமராக்கள் வழங்கப்பட்டன!

குற்றவாளிகளை கண்டறியவும், பொது மக்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலான சட்டையில் பொருத்தக் கூடிய சிறிய நவீன ரக கண்காணிப்பு கேமராக்கள் கோவை காவல் துறையினருக்கு வழங்கப்பட்டன.

போலீசாரிடம் தொடரும் அத்துமீறல்களை தடுக்கவும், குற்றவாளிகளை தகுந்த ஆதாரத்துடன் பிடிக்கும் வகையிலும் தமிழக காவல்துறை தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் சட்டையில் பொருத்தக் கூடிய சிறிய ரக கேமராக்கள், போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு பிரிவில் பணி புரியும் காவலர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக கோவை காவல்துறையினருக்கு இந்த கண்காணிப்பு கேமராக்கள் வழங்கப்பட்டன. கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற கோவை மாநகர காவல் ஆணயர் சுமித் சரண், கேமராக்களை காவல் துறையினருக்கு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய காவல் ஆணையர் சுமித் சரண்,  கோவை மாநகரத்தை பாதுகாப்பு நகரமாக மாற்றும் நோக்கில் உயிர் என்ற அமைப்பின் மூலம் முதற்கட்டமாக 20 கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும். இந்த கேமராக்கள் 8 மணி நேரம் தொடர்ந்து இயங்ககூடியன எனவும் கூறினார்.

அதோடு காற்று, மழை உள்ளிட்ட இடர்பாடுகளில் பாதிப்பிற்கு உள்ளாகாத வகையில் இந்த கேமராக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர்,  குற்றங்களை தடுக்கும் முயற்சி இந்த திட்டத்தின் மூலம் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP