கோவை: இரு சக்கர வாகனங்களில் பெட்ரோல் திருடும் சிறுவர்கள் (சிசிடிவி காட்சி உள்ளே)

கோவை உக்கடம் அருகே இரவு நேரங்களில் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்படும் இரு சக்கர வாகனங்களில் இளைஞர்கள் பெட்ரோல் திருடும் சி.சி.டி வி காட்சிகள் வெளியாகி உள்ளது.
 | 

கோவை: இரு சக்கர வாகனங்களில் பெட்ரோல் திருடும் சிறுவர்கள் (சிசிடிவி காட்சி உள்ளே)

கோவை உக்கடம் அருகே இரவு நேரங்களில் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்படும் இரு சக்கர வாகனங்களில் சிறுவர்கள் பெட்ரோல் திருடும் சி.சி.டி வி காட்சிகள் வெளியாகி உள்ளது.

கோவையில் உக்கடம் சூப்பர் கார்டன் , பொன்விழா நகர் பகுதிகளில் வெளியே நிறுத்தி வைக்கும் இரு சக்கர வாகனங்களில் இருந்து பெட்ரோல் திருடப்படுவதாக தொடர் புகார்கள் எழுந்தன. இந்நிலையில் நேற்று இரவு சூப்பர் கார்டன் அருகே வந்த இரண்டு சிறுவர்கள் அப்பகுதியில் செல்போனில் பேசிக்கொண்டே நோட்டமிட்டபடி  வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தில் இருந்து பெட்ரோலை திருடி உள்ளனர்.

இந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி உள்ளது. இவ்வாறு இரவு நேரங்களில் பெட்ரோல் திருடும் இளைஞர்கள் , செயின் திருட்டு உள்ளிட்ட கொள்ளைகளில் ஈடுபட வாய்ப்பு உள்ளதால், கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு அந்த இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP