கோவை: விபத்தில் உயிர் தப்பும் பதபதைக்கும் வீடியோவுடன் கோரிக்கையை முன்வைக்கும் மக்கள்!

கோவையில் வேகமாக செல்லும் கனரக வாகனத்தால் ஏற்பட்ட விபத்தில் நூலிழையில் உயிர்தப்பியவர்கள் வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 | 

கோவையை அடுத்த செட்டிபாளையம் முதல் பல்லடம் வரை செல்லும் சாலையில் பெரும்பாலும் கனரக வாகனங்கள் அதிகம் செல்கின்றன. இப்பகுதியில் பேருந்திற்காக காத்திருக்கும் போது, அதிகவேகமாக வரும் கனரக வாகனங்களால் பொதுமக்கள் அச்சமடைவதோடு, சில விபத்துக்களும் ஏற்படுகின்றன. இந்நிலையில், தற்போது அந்த இடத்தில் நிகழ்ந்த விபத்தில் 3 பேர் உயிர் தப்பிய வீடியோ தற்போது வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த சிசிடிவி காட்சியில், பேருந்தில் செல்வதற்காக சாலை ஓரம் நின்றுகொண்டிருந்த 3 பேர் மீது வேகமாக வந்த கனரக வாகனம் உராசி செல்கிறது. இதில் அவர்கள் அருகில் உள்ள பள்ளத்தில் விழுந்து எழும் காட்சி பதிவாகியுள்ளது. இப்பகுதியில் வேகமாக கனரகவாகனங்கள் செல்வதை தடுக்க வேகத்தடை அமைக்க வேண்டும் என செட்டிப்பாளையம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP