கோவை: தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை!

கோவையில் ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் 8பேரின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
 | 

கோவை: தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை!

கோவையில் ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் 8பேரின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். 

கோவை மாவட்டம் உக்கடம், குனியமுத்தூர், போத்தனூர், அன்பு நகர் ஆகிய பகுதிகளில் உள்ள சிலருக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் 8 பேரின் வீடுகளில் இன்று காலை திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது, கணினிகள், தொலைபேசிகள் உள்ளிட்ட சிலவற்றை கைப்பற்றினர். 

இது தொடர்பாக தேசிய புலனாய்வு அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்த சோதனைக்கும் இலங்கை குண்டுவெடிப்புக்கும் தொடர்பில்லை எனவும், கொச்சியில் பிடிப்பட்ட ஐ.எஸ் அமைப்பை சேர்ந்தவரின் கீழ் இவர்களுக்கு தொடர்பு இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் சோதனை நடைபெறுவதாக தெரிவித்துள்ளார். 

2018ஆம் ஆண்டு "வீரமரணம்" என்ற பெயருடன் குழு அமைத்து ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்தாக சந்தேகப்பட்ட நபர்களை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கோவையில் கைது செய்தது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP