கோவை: குடும்ப தகராறில் ஒரு வயது குழந்தையுடன், தாய் தீக்குளித்து தற்கொலை!

பொள்ளாச்சியை அடுத்த சுபேகவுண்டன் புத்தூர் கிராமத்தில்குடும்பத் தகராறு காரணமாக ஒரு வயது மகளுடன், தாய் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 | 

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சுப்பையா கவுண்டன் புதூர் கிராமத்தைச் சேர்ந்த தேங்காய் உரிக்கும் தொழிலாளி ஈஸ்வரசாமி என்கிற சதீஷ். இவரது மனைவி மாலதி. இவர்களுக்கு சசிகுமார் என்ற 7 வயது மகனும், மகா ஸ்ரீ என்ற ஒரு வயது மகளும் உள்ளனர். சசிகுமார் நான்காம் வகுப்பு படித்து வருகிறார்.

சதீஷ் தினமும் மது அருந்திவிட்டு வருவதால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை மாலதி  உணவு சமைக்காமல் இருந்ததால் இருவர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சதீஷ் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார்.

இந்நிலையில், மனமுடைந்த மாலதி குழந்தை மகாஸ்ரீ மீதும், தன் மீதும் மண்ணெண்ணெயை ஊற்றி பற்ற வைத்துக் கொண்டார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது இருவரும் உடல் கருகி உயிரிழந்த நிலையில் இருந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆனைமலை போலீசார் தற்கொலை செய்து கொண்ட இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்,கணவர் சதீஸ்சிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP