கோவை: ஐந்து வயது மகள் கார்குழலியை கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட தாய் !

குடும்ப பிரச்சனை காரணமாக தனது ஐந்து வயது மகள் கார்குழலியை கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்
 | 

கோவை: ஐந்து வயது மகள் கார்குழலியை கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட தாய் !

கோவை ஒண்டிப்புதூர் ஸ்ரீ காமாட்சி நகரை சேர்ந்த வேதவள்ளி என்பவர் தனது  பெற்றோரான  ராமகிருஷ்ணன், லீலாவதி மற்றும் தம்பி மாதவனுடன் கடந்த ஆறு மாதங்களாக வசித்து வந்துள்ளார். இதற்கிடையே வேதவள்ளியின் கணவர் கண்ணன் அமெரிக்காவில் வேலை பார்த்து வந்த போது உயிரிழந்துள்ளார்.

 இந்த நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக தனது ஐந்து வயது மகள் கார்குழலியை கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். அக்கம் பக்கத்தினருடன் இவர்கள் எந்த தொடர்பும் இல்லாததால் அக்கம் பக்கத்தினருக்கு விவரம் ஏதும் தெரியவில்லை. பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிங்காநல்லூர் போலீசார்   வேதவள்ளியின் உடலை கைப்பற்றி, விசாரணை நடத்தி வருகின்றனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP