கோவை: வீட்டில் உல்லாச விடுதி நடத்தி வந்த 5 பேர் கைது!

கோவை வடவள்ளி பகுதியில் உள்ள வீட்டில் பெண்களை வைத்து உல்லாச விடுதி நடத்தி வந்த பெண் உட்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
 | 

கோவை: வீட்டில் உல்லாச விடுதி நடத்தி வந்த 5 பேர் கைது!

கோவை வடவள்ளி பகுதியில் உள்ள வீட்டில் பெண்களை வைத்து உல்லாச விடுதி நடத்தி வந்த பெண் உட்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

கோவை மாவட்டம் ராமசெட்டிபாளையம் காமராஜர் காலனியை சேர்ந்தவர் பிரகாஷ்ராஜ் (22). இவர் வடவள்ளி பேருந்து நிறுத்தம் அருகே பேருந்துக்காக காத்திருந்தபோது, அங்கே வந்த ஒரு நபர் தங்களிடம் அழகான பெண்கள் உள்ளதாகவும், ரூ.2000 ஆயிரம் கொடுத்தால் மசாஜ் செய்து உல்லாசம் அனுபவிக்கலாம் எனவும் ஆசை வார்த்தை கூறி அவரை தொண்டாமுத்தூர் ரோடு ஐயாசாமி நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.  

வீட்டிற்குள் சென்ற பிரகாஷ்ராஜ், அங்கு அரை குறை ஆடைகளுடன் பெண்கள்  நிற்பதை கண்டு வெளியே ஓடிவந்து உடனடியாக வடவள்ளி காவல் நிலையத்திற்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் விரைந்து வந்த போலீசார், சென்னையை சேர்ந்த சங்கீதா (35), ஜெயவேல்(35), ஈரோட்டை சேர்ந்த வினோத்(33), கைவுண்டம்பாளையத்தை சேர்ந்த சித்தார்த் (25),  ஹரிகிருஷ்ணன் (25) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP