கோவை :வாடகை பைக்குகளை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் : மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

ரபிடோ உள்ளிட்ட செயலிகள் மூலம் வாடகைக்கு பயன்படுத்தும் இருசக்கர வாகன உரிமையாளர்கள், ஒட்டுநர்கள் மற்றும் பயணிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி எச்சரிக்கை.விடுத்துள்ளார்.
 | 

கோவை :வாடகை பைக்குகளை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் : மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

ரபிடோ உள்ளிட்ட செயலிகள் மூலம் வாடகைக்கு பயன்படுத்தும் இருசக்கர வாகன உரிமையாளர்கள், ஒட்டுநர்கள் மற்றும் பயணிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரபிடோ உள்ளிட்ட செயலிகள் மூலம் வாடகைக்கு பயன்படுத்தும் வாகனங்கள் மீது போக்குவரத்து அலுவலர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் ரபிடோ, ரெண்ட் ஏ பைக் போன்ற செயலிகள் மூலம்  இரு சக்கர வாகனங்களை பயன்படுத்த அரசு அனுமதி வழங்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

மேலும்  இரு சக்கர வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்துவது மோட்டார் வாகன சட்டப்படி குற்றம். அந்த வாகனங்களில் பயணிக்கும் போது விபத்து ஏற்பட்டால் இழப்பீடு மற்றும் காப்பீட்டு தொகை பெற இயலாது எனவும் , இந்த வாகனங்களில் பயணிக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.

இதனை மீறி வாடகைக்கு பயன்படுத்தும் வாகன உரிமையாளர்கள், ஒட்டுநர்கள் மற்றும் பயணிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என  மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP