கோவை: நவ.4ல் ஜவுளி பூங்கா அமைப்பது குறித்த ஆலோசனைக் கருத்தரங்கம்!

கோவை மாவட்டத்தில் சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் அமைப்பது தொடர்பான ஆலோசனை கருத்தரங்கம் வருகிற நவம்பர் 4ம் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது.
 | 

தமிழகத்தில் உள்ள ஜவுளி மையங்களில் சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்களை அமைப்பதை ஊக்குவிக்கும் வகையில் 50 சதவீதம் அல்லது இரண்டரை கோடி ரூபாய் வரை மானியம் வழங்குவதற்கான அரசாணையை  தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மேலும், தொழில்துறையினரின் கோரிக்கையை ஏற்று ஜவுளி பூங்கா அமைக்க 10 ஏக்கர் நிலம் வேண்டும் என்பதை 2 ஏக்கராக குறைத்தும் அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ஜவுளித்துறையினரிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வரும் நவம்பர் மாதம் 4ம் தேதி கோவையில் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் தலைமையில் இந்த கருத்தரங்கம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜவுளித்துறையினர் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு தங்களுக்கு உள்ள சந்தேகங்களை தெளிவுப்படுத்திக்கொள்வதோடு, கூடுதல் தகவல்களையும் துறை சார்ந்த அதிகாரிகளிடம் கேட்டுப்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP