கோவை: சமூக செயற்பாட்டாளர்களை  தாக்கியவர்கள் குறித்து  புகார் மனு அளிக்கப்பட்டது!

கோவை சின்னதடாகம் பகுதியில் சமூக செயற்பாட்டாளர் ஜோஸ்வா, தன் தாக்குதல் நடத்தியவர்கள் மீதும், பொய் புகாரளித்தவர்கள் மீதும் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
 | 

கோவை மாவட்டம் தடாகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விதிமுறைகளை மீறி 100 அடி வரை செம்மண் பொக்லைன்  இயந்திரங்கள் மூலம் எடுக்கப்படுகிறது. அளவுக்கதிகமாக எடுக்கப்படும் செம்மண்ணால், மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரப் பகுதி ஒரு பள்ளத்தாக்கைக் போல காட்சி அளித்து வருவதோடு, மனித - யானை மோதல்களுக்கு காரணமாகவும் உள்ளது. 

இந்நிலையில் தடாகம் சுற்றுவட்டாரப் பகுதிகளில்  அளவுக்கு அதிகமாக செம்மண்  எடுப்பது தொடர்பாக புகாரளிப்பவர்களை செங்கல் சூளை ஆதரவாளர்கள் மிரட்டி வருகின்றனர். இந்நிலையில் நேற்று சின்னதடாகம் பகுதியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் விதிமுறைகளை மீறி செம்மண் எடுப்பது குறித்து மக்கள் நீதி மய்யத்தினர் கேள்வி எழுப்பினர். இதனால் ஆத்திரமடைந்த செங்கல் சூளை ஆதரவாளர்கள் பாபு, பிரபு, சுரேஷ் ஆகியோர் மீது தாக்குதல் நடத்தினர். இதில் காயமடைந்த 3 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 

இதேபோல 24 வீரபாண்டி பகுதியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் பங்கேற்ற சமூக செயற்பாட்டாளர் ஜோஸ்வா மீது, செங்கல் சூளை ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். அதிமுக பகுதி செயலாளர் ஜெயபால் தூண்டுதலால் தாக்கியதாகவும், தாக்கியவர்கள் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்யவில்லை எனவும் கூறிய ஜோஸ்வா, தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், காவல் கண்காணிப்பாளரிடமும் புகார் அளித்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP