கோவை: 16 ஆயிரம் பேர் கலந்து கொண்ட புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான்

கோவையில் 16 ஆயிரம் பேர் கலந்து கொண்ட புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது. இதில் ஜெர்மனி பிரான்ஸ் உள்ளிட்ட வெளிநாட்டினரும், 96 வயதான முதியவர் உள்ளிட்டோர் ஆர்வத்துடன் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டனர்.
 | 

கோவையில் கடந்த ஆறு ஆண்டுகளாக புற்று நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டு வருகிறது இதில் கோவை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று ஏழாவது ஆண்டாக கோவை மாரத்தான் போட்டி துவங்கியது இதில் 16 ஆயிரத்திற்கு மேற்பட்ட இளைஞர்கள், முதியவர்கள், சிறுவர்கள் என அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டனர். இந்த மாரத்தான் போட்டி மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்டது 21 கிலோமீட்டர், 10 கிலோ மீட்டர் மற்றும் 5 கிலோ மீட்டர் என தனித்தனிப் பிரிவுகளாக நடத்தப்பட்டது.

 இந்த மாரத்தான் போட்டியில் தனியார் நிறுவன ஊழியர்கள்,  வங்கி ஊழியர்கள் மற்றும் அரசு அதிகாரிகள், அதிவிரைவு படை போலீசார்  உள்பட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர். மேலும் கோவை மாரத்தான் போட்டியில் பத்திற்கும் மேற்பட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்களும், ஜெர்மனி பிரான்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த வெளிநாட்டினரும்,  96 வயதான  முதியவர் ஆகியோர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP