கோவை: செக்யூரிட்டி வீட்டில் 24 பவுன் நகை கொள்ளை!

கோவையில் தனியார் வங்கி செக்யூரிட்டி வீட்டின் கதவை உடைத்து 24 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
 | 

கோவை: செக்யூரிட்டி வீட்டில் 24 பவுன் நகை கொள்ளை!

கோவையில் தனியார் வங்கி செக்யூரிட்டி வீட்டின் கதவை உடைத்து 24 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். 

கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தை அடுத்துள்ள ராக்கிபாளையம் விநாயகா நகர் பகுதியை சேர்ந்தவர் ஆறுச்சாமியின் மகன் சிவராஜ் (58). இவருடன் மனைவி பாரதி (51), மகன் ஜீவானந்தம் (31), மருமகள் சத்யபிரியா (26) ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர் கணபதியிலுள்ள தனியார் வங்கியில் செக்யூரிட்டியாக வேலை செய்து வருகிறார். இவருடைய மகள் திவ்யாவை பெங்களூரில் திருமணம் செய்துக்கொடுத்துள்ளார். கடந்த வாரம் இவரது மனைவி தனது மகளை பார்க்க பெங்களூர் சென்றுள்ளார். மேலும் மகன் மற்றும் மருமகள் ஆகியோர் கோவை வேடப்பட்டியிலுள்ள மருமகளின் தாயார் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

இந்த நிலையில் 23ம் தேதி இரவு சிவராஜ் செக்யூரிட்டி வேலைக்கு சென்றுவிட்டார். 24ம் தேதி காலை பக்கத்து வீட்டிலுள்ள கணேசன் என்பவர் சிவராஜ் வீடு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து சிவராஜ்க்கு போன் மூலம் தகவல் அளித்துள்ளர். சிவராஜ் வீட்டிற்கு விரைந்து வந்து பார்த்த போது, வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த வளையல், ஜெயின், மோதிரம் உள்ளிட்ட 24 பவுன் நகைகள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP