கோவை: காரில் 10 கிலோ கஞ்சா கடத்தல் - கேரள இளைஞர் கைது

கோவை அருகே காரில் கடத்தி வந்த 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த கலால் வரித்துறையினர் இது தொடர்பாக கேரள இளைஞரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 | 

கோவை: காரில் 10 கிலோ கஞ்சா கடத்தல் - கேரள இளைஞர் கைது

கோவை அருகே காரில் கடத்தி வந்த 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த கலால் வரித்துறையினர் இது தொடர்பாக கேரள இளைஞரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தமிழக- கேரள எல்லையான வாளையாரில் கேரள கலால் வரித்துறை அதிகாரிகள் தீடிர் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது கோவையிலிருந்து பாலக்காடு நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று சோதனை சாவடியில் நிற்காமல் வேகமாக சென்றது. இதையடுத்து அதிகாரிகள் காரை பின் தொடர்ந்து சென்றனர். டோல்கேட் அருகே சென்றபோது, அங்கிருந்த மற்றொரு கலால் வரித்துறை அதிகாரிகள் காரை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அப்போது காரின் பின்பக்கத்தில் தனி அறை அமைக்கப்பட்டு அதில் 10 கிலோ கஞ்சா பொருட்களை கடத்தி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, 10 கிலோ கஞ்சா பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர் கேரள மாநிலம், மலப்புரம் மஞ்சேரி பகுதியை சேர்ந்த அப்துல் ஜலீல் (28) என்பதும், அலங்கார பொருட்கள் வியாபாரம் செய்வதன் பேரில் கஞ்சா கடத்தி விற்பனை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது. மேலும் கேரளாவில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி என்பது குறிப்பிடதக்கது.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP