கூட்டணி பேச்சுவார்த்தை: தேமுதிக அலுவலகம் செல்லும் அமைச்சர்கள்!

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக அதிமுக தரப்பில் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் இன்று மாலை தேமுதிக அலுவலகம் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 | 

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று அதிமுக -பாமக - பாஜக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதை தொடர்ந்து, நேற்று மாலை தேமுதிக தலைவர் விஜயகாந்துடன், மத்திய அமைச்சர் பியூஷ்கோயல் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியானது. இதில் தேமுதிக கேட்ட தொகுதிகளை தர அதிமுக முன்வராததால் தேமுதிக அதிருப்தியடைந்ததாகவும் கூறப்பட்டது. 

இந்நிலையில், அதிமுக நேரடியாக களத்தில் இறங்கியுள்ளது. தேமுதிகவுடனான கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் இன்று மாலை தேமுதிக அலுவலகம் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால் இன்றே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தெரிகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP