மது குடிக்க அரசு வாகனத்தில் டாஸ்மாக் சென்ற குடிமக்கள்!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள அரியப்பம்பாளையம் பகுதியில் நேற்று திடீரென டாஸ்மாக் கடை ஒன்று திறக்கப்பட்டது.
 | 

மது குடிக்க அரசு வாகனத்தில் டாஸ்மாக் சென்ற குடிமக்கள்!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள அரியப்பம்பாளையம் பகுதியில் நேற்று திடீரென டாஸ்மாக் கடை ஒன்று திறக்கப்பட்டது. இதனால் சந்தோஷமடைந்த குடிமக்கள் மதுபானம் வாங்க கடை முன் திரண்டனர். அதே நேரத்தில் டாஸ்மாக் கடை திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சத்தியமங்கலம் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் இரு தரப்பு மக்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் டாஸ்மாக் கடை தற்போதைக்கு திறக்கப்படாது என அதிகாரிகள் உறுதியளித்ததால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

ஆனால் குடிப்பதற்காக வந்த குடிமகன்கள், தங்களுக்கு மது வேண்டும் என்று தொடர்ந்து கோஷமிட்டனர். வேறு வழி இல்லாத அதிகாரிகள் அவர்களை, தங்கள் வாகனத்தில் ஏற்றி அருகில் இருந்த டாஸ்மாக் கடையில் கொண்டு சென்று விட்டனர். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP