மாஞ்சா நூல் அறுத்து குழந்தை உயிரிழப்பு: 4 பேர் கைது!

சென்னையில் மாஞ்சா நூல் அறுத்து 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 | 

மாஞ்சா நூல் அறுத்து குழந்தை உயிரிழப்பு: 4 பேர் கைது!

சென்னையில் மாஞ்சா நூல் அறுத்து 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை கொண்டித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் கோபால். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று அவருடைய மனைவி சுமித்ரா மற்றும் மகன் அபிமன்யுவுடன் கொருக்குப்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டிற்கு இருசக்கரவாகனத்தில் சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது,கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகர் மேம்பாலத்தில் காற்றில் பறந்து வந்த மாஞ்சாநூல் பைக்கில் முன்பகுதியில் இருந்த அபிமன்யு கழுத்தில் வெட்டியது. குழந்தையை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஆர்கேநகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில், குழந்தை அபிமன்யு உயிரிழப்புக்கு காரணமான, மாஞ்சா நூலை பயன்படுத்தி பட்டம் விட்ட கொருக்குப்பேட்டை காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த நாகராஜ் (20), லோகேஷ், லோகநாதன் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP