குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தியவர் வெட்டி கொலை!

குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்திய ஆட்டோ ஓட்டுநர் அவரின் மகள் திருமண வரவேற்பு அன்று வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 | 

குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தியவர் வெட்டி கொலை!

குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்திய ஆட்டோ ஓட்டுநர் அவரின் மகள் திருமண வரவேற்பு அன்று வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை அயனாவரம் திக்காகுளத்தை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் ஜெபசீலன் (48). இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். மகள் ஷீபா ராணிக்கு கடந்த 10 ஆம் தேதி திருப்பதியில் திருமணம் நடந்ததையடுத்து, நேற்று இரவு மீஞ்சூரில் வரவேறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள புறப்பட்ட ஜெயசீலனை  5 பேர் கொண்ட மர்ம  கும்பல் வெட்டி படு கொலை செய்தது. அதனை தடுக்க முயன்ற அவரது மனைவி  பிரிசில்லாவுக்கு பலத்த காயம் ஏற்ப்பட்டது. 

இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த மாதம் 17 ஆம் தேதி சுபலட்சுமி (17) என்ற பெண்ணுக்கும், காம்பு என்கிற வினோத்துக்கும் (21) அயனாவரம் பனம்தோப்பு அருகே உள்ள ராகவேந்திரா கோவிலில்  திருமணம் நடைப்பெறுவதாக காவல்துறையினருக்கு வந்த ரகசிய தகவலை அடுத்து போலிசார் குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தினர். 

அருகில் ஆட்டோ நிறுத்தம் உள்ளதால் ஆட்டோ சங்க தலைவராக உள்ள ஜெபசீலன் தான் போலிசாருக்கு தகவல் அளித்துள்ளார் என்பதை தெரிந்து கொண்ட அவர்கள் முன் விரோதம் காரணமாக நேற்று வெட்டி கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP