சென்னை ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..!

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஐஜி அலுவலகத்தில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வரும் மணிகண்டன் என்பவர் நேற்றிரவு பணி நேரத்தின்போது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 | 

சென்னை ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..!

சென்னை கீழ்ப்பாக்கம் ஐஜி அலுவலகத்தில் ஆயுதப்படை காவலர் மணிகண்டன் என்பவர் இரவுப்பணியின் போது துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை  செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் தமிழக ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருகிறார். இன்று காலை 26வது பிறந்தநாளை, அவர் கொண்டாட இருந்த நிலையில், நேற்று இரவு கீழ்பாக்கம் ஐஜி அலுவலகத்தில் இரவுப்பணியில் ஈடுபட்டிருந்த மணிகண்டன்  தூப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மணிகண்டனின் உடலைக் கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று திருச்சியில் சிறப்பு காவலராக பணிபுரிந்து வந்த முத்து என்பவர் ஓய்வறையில் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட நிலையில், இன்று ஆயுதப்படை காவலர் மணிகண்டன் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP