சென்னை : மாணவனுக்கு ஓட ஓட அரிவாள் வெட்டு!

சென்னை அரும்பாக்கம் சிக்னல் அருகே பச்சையப்பன் கல்லூரி மாணவர்களிடையே நடந்த மோதலில் மாணவர்கள் அரிவாளால் வெட்டிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 | 

சென்னை : மாணவனுக்கு ஓட ஓட அரிவாள் வெட்டு!

சென்னை அரும்பாக்கம் சிக்னல் அருகே  பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பட்டா கத்திகளால் சக மாணவர்களை வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை பிரட்வேயில் இருந்து பூந்தமல்லி நோக்கி சென்ற அரசு பேருந்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பலர் பயணம் செய்தனர். பேருந்து அரும்பாக்கம் சிக்னல் அருகே வந்த போது ரூட் தொடர்பாக மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது.

அப்போது மாணவர்கள் ஒருவரை ஒருவர் பட்டா கத்திகளை கொண்டு பேருந்தின் உள்ளேயும், சாலைகளிலும் தாக்கி கொண்டனர். பட்டப்பகலில் பொதுமக்கள் மத்தியில் நிகழ்ந்த இச்சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த தாக்குதலில் 7 மாணவர்கள் காயமடைந்தனர். இதில் படுகாயமடைந்த வசந்த் மேல்சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் சிசிடிவி காட்சிகள் உதவியுடன் மோதலில் ஈடுபட்ட மாணவர்களை தேடி வருகின்றனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP