மேட்டூரில் ரசாயண கழிவு வெளியேற்றம்: பொதுமக்கள் சாலை மறியல்!

ரசாயன கழிவு காரணமாக இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் அத்திரமடைந்த அப்பகுதி மக்கள் இதனை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி ஆலையை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 | 

மேட்டூரில் ரசாயண கழிவு வெளியேற்றம்: பொதுமக்கள் சாலை மறியல்!

மேட்டூர்  கெம்ப்ளாஸ்ட் ஆலையிலிருந்து வெளியான  ரசாயன கழிவுகள் குடியிருப்பு பகுதியில் புகுந்ததையடுத்து பொதுமக்கள்  ஆலையை முற்றுகையிட்டனர்.

சேலம் மாவட்டம் மேட்டூர் குஞ்சாண்டியூர் பகுதியில் கெம்பிளாஸ்ட் நிறுவனத்திற்கு  சொந்தமான ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்  பணிபுரிந்து வருகின்றனர்.

மேலும் இந்த ஆலையில் வீரியமிக்க ரசாயனங்கள், அமிலங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. கெம்ப்ளாஸ்ட் ஆலையில் இருந்து வெளியேற்றப்பட்ட ரசாயனம் ஆலையை சுற்றியுள்ள  கண்ணாடி மாரியம்மன் கோவில் பகுதி, ஸ்ரீ நகர் பகுதி உள்ளிட்ட பகுதிகளுக்குள் புகுந்ததாகக் கூறப்படுகிறது. 

மேட்டூரில் ரசாயண கழிவு வெளியேற்றம்: பொதுமக்கள் சாலை மறியல்!

இந்த ரசாயன கழிவு காரணமாக இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல்  ஏற்பட்டுள்ளது.  இதனால் அத்திரமடைந்த அப்பகுதி மக்கள் இதனை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி ஆலையை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். 

பின்னர்  தகவலறிந்த சம்பவ இடத்திற்கு வந்த மேட்டூர் வருவாய் கோட்டாட்சியர் ,வட்டாட்சியர் மற்றும் கருமலைக்கூடல் காவல்துறையினர் பொதுமக்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து பொதுமக்கள் கலைந்து  சென்றனர்.  

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP