செல்போன் திருடர்கள் 2 பேரை கையும் களவுமாக பிடித்த பொதுமக்கள்

கோவையில் இரண்டு சக்கர வாகனங்களில் வந்து ஒருவரிடம் செல்போனை திருடிய இரண்டு வாலிபர்களை பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
 | 

கோவை ஆர்.எஸ் புரம் மேற்கு சம்பந்தம் ரோடு பகுதியில் வசிப்பவர் ஹைதர் உசேன் (வயது 23). சம்பவத்தன்று அவர் கோவை ஆர்.எஸ் புரம், ஸ்ரீ சண்முகா ரோடு, அடையார் ஆனந்த பவன் அருகே தன்னுடைய மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு செல்போன் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அந்த  வழியாக  மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக வந்த 2 வாலிபர்கள் செல்போனைப் பறித்து கொண்டு விரைவாக சென்றனர். உடனடியாக ஹைதர் உசேன் கூச்சல் போட, அக்கம் பக்கத்தில் உள்ள மக்கள் சுற்றி வளைத்து இருவரையும் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

போலீஸ் விசாரணையில் செல்வபுரத்தைச் சேர்ந்த யுவராஜ் (24),  சதாம் உசேன் (19), என்பது தெரியவந்தது. செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு  இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP