காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு:  ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீண்!

மணப்பாறையை அடுத்த கலிங்கபட்டி என்ற இடத்தில் காவிரி குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் ஆயிரக்கணக்கான லிட்டர் காவிரி குடிநீர் வீணாகியது.
 | 

திருச்சி மாவட்டம், மணப்பாறை மற்றும் மருங்காபுரி ஆகிய இரண்டு தாலுகா பகுதி கிராம மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வது காவிரி குடிநீர் தான். இதற்காக குழாய் மூலம் காவிரி குடிநீர் கொண்டு செல்லப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது.

இந்த காவிரி நீர் மணப்பாறை பகுதிக்கு கரூர் மாவட்டம், குளித்தலையில் உள்ள காவிரி ஆற்றில் இருந்து நீரேற்று நிலையம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இன்று காலை மணப்பாறையை அடுத்த கலிங்கபட்டி என்ற இடத்தில் காவிரி குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் பீறிட்டு வெளியேற ஆரம்பித்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பீறிட்டு வெளியேறிய குடிநீர் அருகில் உள்ள பகுதிகளில் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது. யாருக்கும் பயனின்றி ஆயிரக்கணக்கான லிட்டர் காவிரி குடிநீர் வீணாவதைப் பார்த்த பொதுமக்கள் இதுபற்றி குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு அளித்த தகவலின் அடிப்படையில் தண்ணீர் நிறுத்தப்பட்டது.

காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு:  ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீண்!

மணப்பாறை பகுதியில் குடிநீருக்காக மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி குடிநீரை பெற வேண்டி உள்ள நிலையில் இதுபோன்று குடிநீர் இருந்தும் அது மக்களுக்கு பயனின்றி வீணாக போவது மக்களை வேதனை அடையச் செய்துள்ளதுடன் அவ்வபோது இதுபோன்று காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாவதை தடுத்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP