ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.. சிசிடிவியால் சிக்கிய கொள்ளையர்கள்

ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.. சிசிடிவி காட்சிகளால் சிக்கிய கொள்ளையர்கள்
 | 

ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.. சிசிடிவியால் சிக்கிய கொள்ளையர்கள்

சென்னையில் வீட்டு வாசலில் நின்ற மூதாட்டியிடம் ஆட்டோவில் வந்து செயினை பறித்துச் சென்ற வழிப்பறி திருடர்கள் இருவரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.
சென்னை ஆதம்பாக்கம் அருகேயுள்ள தில்லை கங்கா நகரில் 80 வயதான மூதாட்டி ருக்மணி குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் சம்பவத்தன்று வழக்கம்போல் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் நோட்டமிட்டு, ஆள் வராத நேரம்  பார்த்து மூதாட்டியின் கழுத்தில் இருந்த 2.5 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இது குறித்த புகாரில் அங்கிருந்த சிசிடிவி காட்சிகள் மூலம் கொள்ளையர்களை காவல்துறையினர் தேடினர். இதன்மூலம் ஆட்டோவின் பதிவெண்ணை கணக்கீட்டு அவர்களை தேடினர். மேலும், ஆட்டோ சென்ற பாதையில் உள்ள சிசிடிவி காட்சிகளையெல்லாம் பார்த்து பின்தொடர்ந்த காவல்துறையினர், சுமார் 19 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆய்வு செய்து மணிமங்கலம் பகுதிக்கு சென்றதை கண்டறிந்தனர். இதனையடுத்து அங்கு பதுங்கியிருந்த சுரேஷ் மற்றும் குமார் ஆகிய இருவரையும் கைது செய்த காவல்துறையினர் 2.5 சவரன் செயின் மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரும் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP