பிளேடால் உடலை கிழித்தவாறு போலீஸை மிரட்டிய கஞ்சா வியாபாரி!... பதற வைக்கும் வீடியோ காட்சிகள்!!

நெய்வேலியில் கஞ்சா விற்பனை செய்து வந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்ய முயன்ற போது, அவர் தன்னுடைய கை மற்றும் வயிற்றை பிளேடால் கிழித்து கொண்டு போலீசாரை மிரட்டுவதாக உள்ள பதறவைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 | 

பிளேடால் உடலை கிழித்தவாறு போலீஸை மிரட்டிய கஞ்சா வியாபாரி!... பதற வைக்கும் வீடியோ காட்சிகள்!!

நெய்வேலியில் கஞ்சா விற்பனை செய்து வந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்ய முயன்ற போது, அந்த இளைஞர் அவருடைய கை மற்றும் வயிற்றை பிளேடால் கிழித்து கொள்ளும் பதறவைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே அதிகளவு கஞ்சா விற்பனை நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கஞ்சா விற்பனை செய்யும் இளைஞர், கஞ்சா அடிப்பவர் என அனைவரும் சேர்ந்து எடுத்த வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியாகி பரப்பை ஏற்படுத்தியது.

அதில், தான் நெய்வேலியை சேர்ந்த பெங்களூர் மணி என்கிற மணிகண்டன் என்றும், தான் கஞ்சா விற்பனை செய்து வருவதாகவும் தெரிவித்திருந்தார். மேலும், கஞ்சா விற்பனையை தடுக்க நினைக்கும் ஒருவரை கொலை செய்யப் போவதாகவும், போலீசார் தன்னை கைது செய்யமுடியுமா? எனவும் சவால் விடுத்திருந்தார்.

இந்நிலையில் இன்று காலை, மந்தாரகுப்பம் போலீசார் சக்தி நகரில் இருந்த மணிகண்டனை கைது செய்ய முயன்றனர். அப்போது, தனது கை, மற்றும் வயிற்று பகுதியில் பிளேடால் கிழித்து கொண்டு போலீசாரிடம் மிரட்டல் விடுக்கும் தொனியில் வாக்குவாதம் செய்துள்ளார். போலீசாரும் என்ன செய்வது என்று அறியாமல், திகைத்து அந்த இளைஞரிடமிருந்து விலகி விலகிச் சென்றனர். இதையடுத்து அவருடைய உறவினர்களின் உதவியுடன் மணிகண்டனை போலீசார் கைது செய்துள்ளனர் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இது தொடர்பான பதறவைக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP