தமிழகத்தில் வலம் வரும் கஞ்சா சாக்லெட்கள்! அதிர்ச்சியில் பெற்றோர்கள்! 

சென்னையில் புழங்கும் கஞ்சா சாக்லெட்கள்! அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்கள்!
 | 

தமிழகத்தில் வலம் வரும் கஞ்சா சாக்லெட்கள்! அதிர்ச்சியில் பெற்றோர்கள்! 

தமிழகத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் வேலைக்குச் செல்பவர்களாகவே இருக்கிறார்கள். கணவன், மனைவி என இருவரும் வேலைக்குச் செல்லும் வீடுகளில், பள்ளி விட்டு வந்ததும், குழந்தைகளுக்கு கடைகளில் வாங்கிச் சாப்பிட பாக்கெட் மணி கொடுக்கப்படுவதும் பலரது வீடுகளில் அரங்கேறி வருகிறது. இந்நிலையில், பீகாரில் இருந்து ரயில் மூலமாக சென்னைக்கு போதை சாக்லெட்களைக் கடத்தி வந்த சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரில் இருந்து எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று நேற்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தது. அதில் வந்த 3 வாலிபர்கள் சந்தேகப்படும்படியாக சென்ட்ரல்  ரயில் நிலையம் பகுதிகளில் சுற்றித் திரிந்தனர். அவர்களின் மீது சந்தேகமடைந்த ரயில்வே போலீசார், அவர்களை பிடித்து விசாரித்ததில், மூன்று பேரும் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளனர்.  சந்தேகமடைந்த ரயில்வே போலீசார், அவர்களின் பையை 200 போதை சாக்லெட்களுடன், கஞ்சா பாக்கெட்களும் இருந்தது தெரிய ந்தது. 

போலீசார் விசாரணையில், இவர்கள் வெளி மாநிலத்தில் இருந்த கஞ்சா, போதை மாத்திரைகள், போதை தரும் சாக்லேட்களை கடத்தி வந்து, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருக்கும் பகுதிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தொடர்ந்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. 
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP