வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அடிதடி!

திருவெறும்பூரில் நடைபெற்ற தேமுதிக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் புதிய தமிழகம் கட்சியினர் அடிதடியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
 | 

வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அடிதடி!

திருச்சி, திருவெறும்பூரில் நடைபெற்ற தேமுதிக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில், புதிய தமிழகம் கட்சியினர் அடிதடியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் திருச்சி தொகுதி, அதிமுக - பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தேர்தலை முன்னிட்டு திருச்சி தொகுதி தேமுதிக வேட்பாளர் இளங்கோவனை அறிமுகம் செய்யும் கூட்டம் மற்றும் கூட்டணி கட்சியினரின் செயல் வீரர் கூட்டம், திருவெறும்பூர் பெல் அண்ணா தொழிற்சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, எம்.பிக்கள் குமார், ரத்தினவேல் உள்ளிட்ட நிர்வாகிகளும், பாஜக, பாமக, புதிய தமிழகம் மற்றும் கூட்டணி கட்சியினரும் கலந்து கொண்டனர்.

வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அடிதடி!

கூட்டத்தில் பேசிய பாஜக தேசிய செயலர் சுப்ரமணியம், பாஜகவின் சாதனை மற்றும் பிரதமர் மோடியை பற்றி பேசிக் கொண்டிருந்தார். அப்போது கூட்டத்தில் கீழே நின்று கொண்டிருந்த அதிமுக தொண்டர் ஒருவர் அம்மாவை பற்றி பேசுங்கள் என கூச்சலிட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.
இதையடுத்து கூட்டம் முடிந்து நிர்வாகிகள் இறங்கி கொண்டிருந்தனர். 

அப்போது புதிய தமிழகம் கட்சியை சேர்ந்த மாவட்ட செயலாளர் பிச்சைமுத்துவுக்கும், அதன் ஒன்றிய செயலாளர் வெனித் ஆகிய இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டது. இதனால் புதிய தமிழகம் கட்சியை சேர்ந்தவர்கள் இரு குழுக்களாக பிரிந்து கூட்ட அரங்கில் இருந்த நாற்காலியை தூக்கி ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். 

வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அடிதடி!

மேலும் கூட்ட அரங்கில் இருந்து வெளியேறி சாலைக்கு வந்தவர்கள் அங்கும் தாக்குதலில் ஈடுபட்டனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கூட்டத்தை கலைத்தனர்.

தேமுதிக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் புதிய தமிழகம் கட்சியின் ஒன்றிய செயலாளருக்கு மேடையில் நாற்காலி ஒதுக்கப்படவில்லை என்றும், புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட செயலாளர் பிச்சைமுத்து தங்களிடம் பாராபட்சம் காட்டி வருவதாகவும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில்  அக்கட்சியினரிடையே அடிதடி அரங்கேறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் கூட்டணி கட்சியினரிடையே முகம் சுழிக்க வைத்தது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP