கோவையில் சமூக ஆர்வலர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த  செங்கல் சூளை அதிபர்கள்!

கோவையில் செங்கள் சூளை சட்ட விரோதமாக இயஙகி வரும் வேலையில் அதனை மூட சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். பின் நிர்வாகம் முறையாக நடவடிக்கை மேற்க்கொள்ளாததால் வழக்கு தொடரப்பட்டது. இதனை எதிர்த்த செங்கல் சூளை அதிபர்கள் சமூக ஆர்வலர்களை அச்சுறுத்தும் நோக்கில் செயல்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
 | 

குறிப்பாக இந்த சம்பவம் தொடர்பாக தடாகத்தில் தொடர்ந்து குரல் எழுப்பி வரும் சமூக ஆர்வலர் கணேஷ் என்பவரது வீட்டிற்கு சென்ற நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று அவரிடம் கொலை மிரட்டல் விடுத்தது தெரிய வந்துள்ளது. சுமார் 200க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் மாசு கட்டுப்பாட்டு வாரிய அனுமதி பெறாமலேயே நடைபெற்று வருவது சமூக ஆர்வலர்கள் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் வெளி கொண்டு வந்தனர்

சுமார் 120 அடி வரை மண் தோண்டப்பட்ட தாக எழுந்த புகாரை அடுத்து கடந்த வாரம் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக கனிம வளம் கொள்ளை அடிக்க பட்டு வரும் இந்த நிலையில் இதனை எதிர்த்து தொடர் போராட்டம் நடத்திய சமூக ஆர்வலர்களுக்கு கிடைத்த முதல் வெற்றி அந்த ஆலோசனை கூட்டம் ஆகும்நெருக்கடிக்கு உள்ளான செங்கல் சூளை அதிபர்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்க போராடும் கணேஷ் உள்ளிட்டோரை அச்சுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

கோவையில் சமூக ஆர்வலர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த  செங்கல் சூளை அதிபர்கள்!

இந்நிலையில் இன்று காலை 10.40 மணியளவில் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் சி ஆர் ராமச்சந்திரன், சூளை அதிபர் சங்கங்களின் தலைவர் தர்மராஜ் தலைமையில் 150  அடியாட்களை  ஏவிவிட்டு கணேஷ் வீட்டை சூறையாடி இருப்பதாக குற்றச்சாட்டி இருக்கிறார். மேலும் சின்ன எம் ஜி ஆர் என்கிற சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர் வீட்டையும் முற்றுகையிட்டுள்ளனர்.

சுமார் பதினைந்து வருடங்களாக சுற்றுச்சூழல் பெருமளவில் பாதிக்கப்பட்டு அந்த பகுதியில் உடல் உபாதைகளுக்கு உள்ளாகி வாரம் ஒருவராவது இறக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது குறிப்பிட வேண்டிய ஒன்று.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP