கோவை அரசு மருத்துவமனையில் தாய்ப்பால் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு இன்று கோவை அரசு மருத்துவமனையில் தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
 | 

கோவை அரசு மருத்துவமனையில் தாய்ப்பால் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு இன்று கோவை அரசு மருத்துவமனையில் தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 

தாய்ப்பாலின் முக்கியத்தும் மற்றும் தாய்ப்பால் வங்கி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1 - 7 ஆம் தேதி வரை  உலக தாய்ப்பால் வாரமாக அனுசரிக்கப்படுகிறது. அதன்படி இன்று கோவை அரசு மருத்துவமனையில் ரோட்டரி கிளப் மற்றும் குழந்தைகள் நலத்துறை சார்பில் உலக தாய்ப்பால் வாரம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் அரசு மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கோவை அரசு மருத்துவ மனையின் குழந்தைகள் நல மருத்துவர் பூமா,  தாய்ப்பால் கிடைக்காமல் இருக்கும் குழந்தைகளுக்கும், 1.5 எடைக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கும்  தாய்ப்பால் வங்கியின் மூலம் தாய்ப்பால் கிடைக்க வழி வகை செய்யப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் தாய்மார்களிடம் இருந்து தாய்ப்பால் பெறப்பட்டு மைக்ரோ பயாலஜி சோதனை  மேற்கொள்ளப்பட்டு குழந்தைகளுக்கு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் அப்போது தெரிவித்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP