எட்டி உதைத்ததில் இடுப்பெலும்பு உடைந்து குழந்தை உயிரிழப்பு - தாயின் இரண்டாவது கணவர் வெறிச்செயல்

எட்டி உதைத்ததில் இடுப்பெலும்பு உடைந்து குழந்தை உயிரிழப்பு
 | 

எட்டி உதைத்ததில் இடுப்பெலும்பு உடைந்து குழந்தை உயிரிழப்பு - தாயின் இரண்டாவது கணவர் வெறிச்செயல்

சென்னை பள்ளிக்கரணை அடுத்த சித்தாலபாக்கம் பகுதியில் வசித்து வருபவர்கள் வெங்கடேசன்- கங்கா. கங்காவின் கணவர் ஒரு விபத்தில் இறந்துவிட தனது இரண்டு குழந்தைகளுடன் வெங்கடேசனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை மூத்த மகளை அழைத்துக் கொண்டு கங்கா கேரளாவில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு சென்றுள்ளார். 3 வயது குழந்தையான அருணை, சென்னையில் வெங்கடேசன் பார்த்து வந்துள்ளார். எட்டி உதைத்ததில் இடுப்பெலும்பு உடைந்து குழந்தை உயிரிழப்பு - தாயின் இரண்டாவது கணவர் வெறிச்செயல்இரண்டு நாட்களுக்கு முன்பு குழந்தை மயங்கி விழுந்ததாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. இதனிடையே குழந்தையை பார்த்துவந்த வெங்கடேஷன் எங்கே சென்றார் என தெரியவில்லை. ஆனால் சிகிச்சை பலனின்றி எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் 3 வயது குழந்தை உயிரிழந்தது. மேலும் குழந்தையின் இடுப்பெலும்பு உடைந்து இருப்பதாக மருத்துவர்கள் பள்ளிக்கரணை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதனடிப்படையில் குழந்தை கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகித்த காவல்துறையினர், தப்பிச் சென்ற வெங்கடேசனை கள்ளக்குறிச்சியில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். அப்போது அடிக்கடி குடித்துவிட்டு குழந்தைகளை அடிப்பதை வெங்கடேஷன் வாடிக்கையாக கொண்டதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று குழந்தையை காலால் எட்டி உதைத்தாகவும் இதில் குழந்தை படுகாயமடைந்ததாகவும் விசாரணையில் வெங்கடேஷன் ஒப்புக் கொண்டார்.  

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP