பிரசவத்தின்போது தாயும், சேயும் உயிரிழப்பு

கோவையில் அரசு மருத்துவரின் தனியார் மருத்துவமனையில் நடந்த பிரசவத்தின்போது, தாயும், சேயும் உயிரிழந்த நிலையில், மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 | 

பிரசவத்தின்போது தாயும், சேயும் உயிரிழப்பு

கோவையில் அரசு மருத்துவருக்கு சொந்தமான தனியார் மருத்துவமனையில் நடந்த பிரசவத்தின்போது, தாயும், சேயும் உயிரிழந்ததையடுத்து, மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அரசு மருத்துவமனை முன்பு இறந்த பெண்ணின் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். 

கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிந்து வருபவர் திலகவதி. இவர் தனியாக தனியார் மருத்துவமனை ஒன்றையும் நடத்தி வருகிறார். அந்த மருத்துவமனையில், இன்று  ஒரு பெண்ணுக்கு பிரசவம் பார்க்கப்பட்டது. இதற்காக அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் செவிலியர் ஒருவரையும் மருத்துவர் திலகவதி அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளார். அப்போது, மருத்துவரின் அலட்சியத்தால், எதிர்பாராதவிதமாக தாயும், சேயும் பரிதாபமாக உயிரிழந்தனர். 

இதையடுத்து, இருவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. இதையறிந்து அங்கு குவிந்த உயிரிழந்தவர்களின் உறவினர்கள், மருத்துவர் திலகவதி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோவை அரசு மருத்துவமனை பிரேதப் பரிசோதனை கிடங்கு முன்பு மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP