வெடிகுண்டு மிரட்டல்: ஈரோடு ரயில் நிலையத்தில் சோதனை!

ஈரோடு ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக வந்த மிரட்டலை அடுத்து மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
 | 

வெடிகுண்டு மிரட்டல்: ஈரோடு ரயில் நிலையத்தில் சோதனை!

ஈரோடு ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக வந்த மிரட்டலை அடுத்து மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

சென்னை கட்டுப்பாட்டு அறையை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் ஈரோடு ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளார். மிரட்டலையடுத்து, ரயில் நிலையத்தில் போலீசார் மோப்பா நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ஈரோட்டிற்கு வந்து செல்லும் ரயில்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்ம நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP