விபத்தில் உயிரிழந்த விமானப்படை வீரர் உடல் தகனம்

அருணாச்சல விமான விபத்தில் உயிரிழந்த விமானபடை வீரர் வினோத்தின் உடலுக்கு கோவை சூலூர் விமான படைத்தளத்தில் விமான படை அதிகாரிகள் இன்று அஞ்சலி செலுத்தினார்கள்.
 | 

விபத்தில் உயிரிழந்த விமானப்படை வீரர்  உடல் தகனம்

அருணாசலப் பிரதேசத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த விமானப்படை வீரர் வினோத்தின் உடலுக்கு, கோவை சூலூர் விமான படைத்தளத்தில் விமானப் படை அதிகாரிகள் இன்று அஞ்சலி செலுத்தினார்கள்.

அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து  கடந்த ஜூன் 3 -ஆம் தேதி, 13 விமானப்படை  வீரர்களுடன் புறப்பட்ட ஏ.என். 32 ரக விமானம், அருணாசலப் பிரதேச வனப்பகுதியில் விபத்திற்குள்ளானது.

நீண்ட தேடுதலுக்கு பின்னர் 13 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு, அவரவர் சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டது. விமான விபத்தில் உயிரிழந்த கோவையை சேர்ந்த வினோத்தின் உடல், சூலூர் விமான படைத்தளத்திற்கு இன்று காலை  கொண்டு வரப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதையடுத்து, சிங்காநல்லூரில் உள்ள வினோத்தின் இல்லத்திற்கு உடல் கொண்டு செல்லப்பட்டு, இறுதிச்சடங்குகளுக்கு பின்னர், மதியம் 12 மணி அளவில் உடல் தகனம் செய்யப்பட்டது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP