கொடிகளை அகற்றுவதில் இரு கட்சிகளிடையே வாக்குவாதம்!

கும்பகோணம் நகர் பகுதிகளில் தேர்தல் விதிமுறைகளை மீறி தோரணங்களாக கட்டப்பட்ட அதிமுக, பாஜக கொடிகளை அகற்ற கோரி திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
 | 

கும்பகோணத்தை அடுத்த உப்புக்கார தெருவில் தேர்தல் விதிமுறைகளை மீறி அதிமுக, பாஜக உள்ளிட்ட கொடி தோரணங்கள்  அகற்றப்படமால் இருந்தன. இதனை கண்ட திமுகவினர் அகற்றுமாறு கூறினர். அப்போது இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்து அப்பகுதி மக்கள் உடனடியாக தேர்தல் அதிகாரிக்கு தகவல் கொடுத்தனர். 

இதையடுத்து பொதுமக்கள் மற்றும் திமுக, அதிமுகவினர் அப்பகுதியில் திரண்டனர். தகவல் அறிந்து வந்த மேற்கு காவல்நிலைய ஆய்வாளர் மணிவேல் சம்பவ இடத்திற்கு வந்து கொடிகளை அகற்றி இரு தரப்பினருக்கும் இடையே சமரசம் செய்து வைத்தார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP