போதைக்காக பைக் திருடும் கொள்ளையன் சிசிடிவியால் கைது..

போதைக்காக பைக் திருடும் கொள்ளையன் சிசிடிவியால் கைது..
 | 

போதைக்காக பைக் திருடும் கொள்ளையன் சிசிடிவியால் கைது..

சென்னையில் மது அருந்துவதற்காக தொடர் வாகன திருட்டில் ஈடுபட்ட நபர் காவல்துறையினர் பிடியில் சிக்கினார். 

சென்னையில் இருசக்கர வாகனங்கள் திருடப்படுவதாக போலீசாருக்கு தொடர் புகார்கள் குவிந்தன. இதையடுத்து சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் சைதாப்பேட்டையை சேர்ந்த புருஷோத்தமன் என்பவர் தொடர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து போலீசார் விசாரணை செய்தனர். இதில் அவர் மது அருந்துவதற்காக மட்டுமே இருசக்கர வாகனங்களை திருடி வந்தது தெரியவந்தது. வாகனத்தில் உள்ள உதிரி பாகங்களை கழட்டி பழைய இரும்புகடைகளில் விற்று மது அருந்தி வந்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அவரிடம் இருந்து 14 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP