கோவையில் மிகப்பெரிய கலவரம் நடைபெற வாய்ப்பு: இந்து முன்னணி தலைவர்

கோவையில் மிகப்பெரிய அளவில் கலவரம் நடைபெற வாய்ப்புள்ளதாக இந்து முன்னணி கட்சியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
 | 

கோவையில் மிகப்பெரிய கலவரம் நடைபெற வாய்ப்பு: இந்து முன்னணி தலைவர்

கோவையில் மிகப்பெரிய அளவில் கலவரம் நடைபெற வாய்ப்புள்ளதாக இந்து முன்னணி கட்சியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். 

இந்து முன்னணி கட்சியின் மாநில சிறப்பு செயற்குழு கூட்டம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நேற்று தொடங்கி 2 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

இந்த கூட்டத்தில் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு, ஜம்மு-காஷ்மீரில் 370 சட்டப்பிரிவை ரத்து செய்தது, ஹிந்தி எதிர்ப்பு என்று கபட நாடகம் ஆடும் திமுக உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகளுக்கு கண்டனம், பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறி வரும் தமிழகம், திருமாவளவனை கைது செய்ய வேண்டும், தமிழகத்தில் பிரிவினை ஓடும் தீயசக்திகளை வேரறுப்போம் உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்த சிறப்பு செயற்குழு கூட்டத்திற்கு தமிழகத்தில் உள்ள இந்து முன்னணி 57 மாவட்டத்தை சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் அடையாள அட்டையுடன் கலந்துகொண்டனர். 

கோவையில் மிகப்பெரிய கலவரம் நடைபெற வாய்ப்பு: இந்து முன்னணி தலைவர்

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், வரும் ஜூன் மாதம் சென்னையில் இந்து முன்னணி மாநில மாநாடு நடைபெறவுள்ளதாகவும், அந்த மாநாட்டை எப்படி சிறப்பாக நடத்துவது என்பது குறித்து இந்த கூட்டத்திலே விவாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தில் உள்ள உளவுத் துறை மிகவும் மந்த நிலையில் உள்ளது என்றும்,  பங்களாதேசை சேர்ந்தமுஸ்லிம்கள் எந்தவித அனுமதியும் இன்றி தமிழகத்தில் அதிக அளவில் ஊடுருவி இருப்பதாகவும் தெரிவித்த அவர் மத்திய அரசின் உளவு பிரிவான என்ஐஏ தான் அவர்களில் சிலரை கண்டுபிடித்துள்ளதாகவும், இதுகுறித்து மாநில உளவுப் பிரிவு உடனடியாக கண்காணிக்க வில்லை என்றால் கோவையில் மிகப்பெரிய அளவில் கலவரம் நடைபெற வாய்ப்புள்ளது என்றும் கூறினார்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP