மகாத்மா காந்தியின் பிறந்த தினம் கொண்டாடிய  பாரதிய ஜனதா!!!

பிளாஸ்டிக்கை ஒழித்து கதர் ஆடையை அணிய வேண்டும் மற்றும் சுதேசி பொருட்களை ஆதரிக்க வேண்டும் போன்ற நோக்கங்களை வலியுறுத்தி சமூக விழிப்புணர்வு பாதயாத்திரை ஸ்ரீரங்கத்தில் இன்று நடைபெற்றது.
 | 

மகாத்மா காந்தியின் பிறந்த தினம் கொண்டாடிய  பாரதிய ஜனதா!!!

மகாத்மா காந்தி அவர்களின் நூற்றி ஐம்பதாவது பிறந்த தினத்தையொட்டி பாரதிய ஜனதா கட்சி சார்பில் தூய்மை பேணவும், மரக்கன்றுகளை நட்டு நீர் ஆதாரத்தை காக்க வேண்டும் மற்றும் இயற்கை வேளாண்மையை மேம்படுத்தவும், பிளாஸ்டிக்கை ஒழித்து கதர் ஆடையை அணிய வேண்டும் மற்றும் சுதேசி பொருட்களை ஆதரிக்க வேண்டும் போன்ற நோக்கங்களை வலியுறுத்தி சமூக விழிப்புணர்வு பாதயாத்திரை ஸ்ரீரங்கத்தில் இன்று நடைபெற்றது.

அம்மா மண்டபம் பகுதியில் இருந்து தொடங்கிய இந்த சமூக விழிப்புணர்வு பாதயாத்திரையை முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கிவைத்து பேரணியில் பங்கேற்று சென்றார். அம்மா மண்டபத்தில் இருந்து தொடங்கிய பாதையாத்திரையானது ஸ்ரீரங்கம் வழியாக திருவானைக்காவல் நான்குகால் மண்டபத்தில் நிறைவுபெற்றது, இதில் சுமார் 150க்கும் மேற்பட்ட பாஜகவினர் பங்கேற்றனர். 

மகாத்மா காந்தியின் பிறந்த தினம் கொண்டாடிய  பாரதிய ஜனதா!!!

முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பொன்.ராதாகிருஷ்ணன்: நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைதேர்தலில் பாஜக கூட்டணி வெற்றிபெறும் என்றும், ராஜீவ் காந்தி கொலை குறித்து  சீமான் பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது ஏற்றுக்கொள்ள முடியாதது என கூறிய அவர், எமர்ஜென்சி காலத்தில்  ஸ்டாலின் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது உண்மை. ஆனால் கைது செய்து சிறையில் அடைத்தவர்களோடே தற்போது கூட்டணி வைத்திருப்பதுதான் இன்றைய நிலை.

தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு  பணம்பட்டுவாடா யார் செய்தாலும், அந்த கட்சியின் வேட்பாளரை 6ஆண்டு காலம் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர் என அறிவிக்க வேண்டும் என்றார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP