சேலத்தை கலக்கிய பலே கொள்ளையன் கைது.. விசாரணையில் அதிர்ந்த காவலர்கள்

salem theft case arrest
 | 

சேலத்தை கலக்கிய பலே கொள்ளையன் கைது.. விசாரணையில் அதிர்ந்த காவலர்கள்

சேலம் மாநகர பகுதிகளில் தொடர் கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றி வந்த கொள்ளையனை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 6 இருசக்கர வாகனங்கள், தங்க நகைகள், முருகன் சிலை, ரூ.70 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

சேலத்தை கலக்கிய பலே கொள்ளையன் கைது.. விசாரணையில் அதிர்ந்த காவலர்கள்சேலம் மாநகர பகுதிகளில் அடிக்கடி கொள்ளை சம்பவம் நடப்பதாக காவல்நிலையத்தில் புகார் மனுக்கள் குவிந்தன. இது தொடர்பாக விசாரணை நடத்திய தனிப்படையினர், சூரமங்கலம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை செய்தனர். அந்த நபர் ஓமலூரைச் சேர்ந்த அய்யந்துரை(48) என்பது தெரிய வந்தது. கடந்த அக்டோபரில் கோவை சிறையில் இருந்து வெளியே வந்த அய்யந்துரை, அன்று முதல் தனது கைவரிசையை காட்டியதும் விசாரணையில் தெரியவந்தது. கொள்ளை அடிக்க செல்லும் இடங்களில் இருக்கும் இருசக்கரவாகனங்களையும் திருடி விற்பனை செய்து வந்துள்ளார். ஒருநாள் திருடாவிட்டாலும் அந்த இரவு தனக்கு தூக்கம் வராது என விசாரணையின்போது அய்யந்துரை கூறியதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். அய்யந்துரை எப்போதும் தனது குடும்பத்தினரை சந்திப்பது இல்லை என்றும் தனி ஆளாகவே கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றுவதாகவும் காவல்துறையினர் கூறுகின்றனர்.  

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP