நாளை உடல் உறுப்பு தானம் பற்றி விழிப்புணர்வு ஒத்திகை  நிகழ்ச்சி

உடல் உறுப்பு தானம் பற்றியான விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி பி.எஸ்.ஜி மருத்துவமனை சார்பில் நாளை நடைபெறுகிறது.
 | 

நாளை உடல் உறுப்பு தானம் பற்றி விழிப்புணர்வு ஒத்திகை  நிகழ்ச்சி

உடல் உறுப்பு தானம் பற்றியான விழிப்புணர்வு ஒத்திகை  நிகழ்ச்சி பி.எஸ்.ஜி மருத்துவமனை சார்பில் நாளை நடைபெறுகிறது.

உலக முழுவதும்  உடல் உறுப்பு தானம் நாளாக நவம்பர் 27ஆம் தேதியாக அனுசரிக்கப்பட்டு வருகின்றது. உலக அளவில் தமிழகம் உடல் உறுப்பு தானத்தில் முதலிடம் பெற்று வருவதை தொடர்ந்து. இந்த உடல் உறுப்பு தானம் பற்றியான மருத்துவர் புவனேஸ்வரனுடன் இன்று செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

இதில் உடல் உறுப்புகள் தானம் பற்றி மக்களிடயே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக  பிஎஸ்ஜி மருத்துவமனை மற்றும் மாநகர போக்குவரத்து காவல்துறை, சுகாதாரத்துறை சார்பாக நாளை கோவை விமான நிலையத்தில் இருந்து 4 உறுப்புகள் அடங்கிய  பெட்டிகளை அவசரமாக மூன்று நிமிடங்களில் ஆம்புலன்ஸ் மூலமாக பி.எஸ்.ஜி மருத்துவமனைக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதனைத்தொடர்ந்து, ஏற்கனவே உடல் உறுப்பு தானம் செய்த உறவினர்களை அழைத்து நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியானது நடைபெறுகிறது என்றார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP