மக்கள் நீதிமன்றம் குறித்த விழிப்புணர்வு  பேரணி!

மக்கள் நீதிமன்றத்தை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
 | 

மக்கள் நீதிமன்றம் குறித்த விழிப்புணர்வு  பேரணி!

மக்கள் நீதிமன்றத்தின் தேவையை பொதுமக்கள் நன்கு பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு  பேரணி நடைபெற்றது. இதில் வழக்கறிஞர்கள் மற்றும் சட்டக் கல்லூரி மாணவ மாணவிகள் திரளாக பங்கேற்றனர்.

தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில்  தேசிய மக்கள் நீதிமன்றம் நாளை (சனிக்கிழமை) காலை சேலத்தில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது. இந்த மக்கள் நீதிமன்றத்தை  பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 

மக்கள் நீதிமன்றம் குறித்த விழிப்புணர்வு  பேரணி!

 சேலம் நீதிமன்றத்தில் தொடங்கிய  இந்த பேரணி சுமார் 3 கிலோமீட்டர் தூரம் நடைபெற்றது. இந்த பேரணியை  மாவட்ட நீதிபதி குமரகுரு தொடங்கி வைத்து பேரணியில் கலந்து கொண்டார்.  இதில் நீதிபதிகள்,மாஜிஸ்திரேட்டுக்கள், மற்றும் சட்டக் கல்லூரி மாணவ மாணவிகள் திரளாக பங்கேற்று  விழிப்புணர்வு தட்டிகளை ஏந்துச் சென்றனர்.

newstm.in

 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP