உலக இருதய தினத்தையொட்டி திருச்சியில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்

உலக இருதய தினத்தையொட்டி காவேரி மருத்துவமனை மற்றும் பல்வேறு அமைப்புகள் மற்றும் திருச்சி மாவட்ட தடகள சங்கம் இணைந்து ”இருதயத்தை காப்போம்” என்ற கருத்தை வலியுறுத்தி ஓட்டம் மற்றும் நடைபயிற்சி முக்கியத்துவத்தை பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் ஓட்டப்பந்தயமானது திருச்சியில் இன்று நடைபெற்றது.
 | 

10 கிலோ மீட்டர் மற்றும் 5 கிலோ மீட்டர் என இரு பிரிவுகளாக வயது அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த போட்டியில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்று ஓடினர். இந்த மாரத்தான் ஓட்டப் போட்டியினை மாவட்ட ஆட்சியர் சிவராசு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

உலக இருதய தினத்தையொட்டி திருச்சியில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்

டிவிஎஸ் டோல்கேட் சாலையில் இருந்து தொடங்கி மன்னார்புரம், வயர்லெஸ் ரோடு வழியாக அண்ணா விளையாட்டு அரங்கில் நிறைவுபெற்ற இந்த மாராத்தான் ஓட்டத்தில் 10 கி.மீ., பெண்கள் பிரிவில் கஸ்தூரி, கிருத்திகா ஆகியோர் முதல் இரு இடங்களையும், ஆடவர் பிரிவில் பிரேம், சந்தோஷ் ஆகியோர் முதல் இரு இடங்களையும் பிடித்தனர்.

உலக இருதய தினத்தையொட்டி திருச்சியில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்

இதேபோன்று வயது அடிப்படையில் மற்றும் மாஸ்டர் பிரிவுகளில் முதல் 6 இடங்களை பிடித்தவர்களுக்கு ஊக்கப்பரிசு மற்றும் சான்றிதழ், பதக்கங்கள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP