ஆடிப்பெருக்கு: கும்பகோணத்தில் களைகட்டும் வியாபாரம்

தமிழகத்தில் ஆடிப்பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், அதற்கான சப்பரத் தட்டி உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. இப்பண்டிகைக்கான காதோலை கருகமணி, மற்றும் விளாம்பழம், நாவல் பழம், பேரிக்காய், உள்ளிட்ட பழங்கள் மஞ்சள், குங்குமம், திருமாங்கல்ய நாண் போன்றவைகளின் விற்பனை சூடுபிடித்துள்ளது.
 | 

ஆடிப்பெருக்கு: கும்பகோணத்தில் களைகட்டும் வியாபாரம்

தமிழகத்தில் ஆடிப் பெருக்கு  நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், அதற்கான சப்பரத் தட்டி உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. 

விவசாயத்தை காக்கும் அன்னையாக, காவிரித் தாய் விளங்குவதால், காவிரி அன்னையை போற்றும் வகையில், தமிழ் மாதமான ஆடி 18ம் தேதி, ஆடிப் பெருக்கு என்ற பெயரில் பெரும் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த நாளில், மாங்கல்யத்தை பிரித்து கோர்த்து அணிந்து கொள்வதால், மாங்கல்ய பலம் கிடைக்கும் என்ற நம்பிக்கையிலும், இந்த ஆடிப்பண்டிகை டெல்டா மாவட்டங்களில் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆடிப்பெருக்கு: கும்பகோணத்தில் களைகட்டும் வியாபாரம்

இந்த விழாவின் போது, காவிரி ஆற்றில் காப்பரிசி, காதோலை கருகமணி, பழங்கள் வைத்து, தீப, தூப ஆராதனை காண்பித்து, அதனை இலையில் வைத்து நீரில் விடுவது வழக்கம். இதே போன்று, சிறுவர்கள் பாத்திரங்களில் காவிரி நீரை எடுத்து, சிறிய சப்பரத் தட்டிகளில் வைத்து, உற்சாகமாக தங்கள் வீடுகளுக்கு காவிரி அன்னை அழைத்துச் செல்வதாக எண்ணி, எடுத்துச் செல்வார்கள். இதனால், வீடும், விவசாயமும் செழிக்கும் என்பதால் ஆண்டாண்டுகளாக இவ்வாறு வழிபடுவது வழக்கமாக உள்ளது. 

ஆடிப்பெருக்கு: கும்பகோணத்தில் களைகட்டும் வியாபாரம்

இப்பண்டிகைக்கான காதோலை கருகமணி, மற்றும் விளாம்பழம், நாவல் பழம், பேரிக்காய், உள்ளிட்ட பழங்கள் மஞ்சள், குங்குமம், திருமாங்கல்ய நாண் போன்றவைகளின் விற்பனை  சூடுபிடித்துள்ளது. இதே போன்று சிறுவர்கள் இழுக்கும் சிறிய சப்பரங்கள் தயாரிக்கும் பணிகள் மூப்பக்கோவில் பகுதியில் தீவிரமடைந்துள்ளது. 

ஆடிப்பெருக்கு: கும்பகோணத்தில் களைகட்டும் வியாபாரம்

வரும் சனிக்கிழமை (நாளை) ஆடிப்பெருக்கு கொண்டாடப்பட்டுள்ள நிலையில், கும்பகோணத்தில் காவிரி ஆறு வறண்டு கிடக்கிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP