சசிகலாவிடம் விசாரணை நடத்த ஆறுமுகசாமி ஆணையம் முடிவு!

ஜெயலலிதா மரணம் தொடர்பாக பெங்களூரூ பரப்பன அக்ராஹார சிறையில் உள்ள சசிகலாவின் வாக்குமூலத்தை நேரடியாக பெற ஆறுமுகசாமி ஆணையம் திட்டமிட்டுள்ளது. சசிகலாவை விசாரிக்க அனுமதி கோரி தமிழக உள்துறை மற்றும் கர்நாடக சிறைத்துறைக்கு ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.
 | 

சசிகலாவிடம் விசாரணை நடத்த ஆறுமுகசாமி ஆணையம் முடிவு!

ஜெயலலிதா மரணம் தொடர்பாக பெங்களூரூ பரப்பன அக்ராஹார சிறையில் உள்ள சசிகலாவின் வாக்குமூலத்தை நேரடியாக பெற ஆறுமுகசாமி ஆணையம் திட்டமிட்டுள்ளது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதுவரை 130 க்கும் அதிகமானோரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசி்கலா தரப்பில் விளக்கம் அளிக்க கோரப்பட்டது., அதற்கு 55 பக்க அபிடவிட் சசிகலா தரப்பில் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் அவரிடம் நேரில் சென்று பரப்பன அக்ராஹார சிறையில் விசாரிக்க திட்டமிட்டுள்ள, ஆறுமுகசாமி ஆணையம் தற்போது தமிழக உள்துறைக்கும், பெங்களூர் சிறைத்துறைக்கும் கடிதம் அனுப்பியுள்ளது. சசிகலாவை சிறையில் விசாரிக்க அனுமதி பெற்றுத்தரக்கோரியும், அனுமதி வழங்கக்கோரியும் இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP