ஆருத்ரா தரிசனம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

கும்பகோணம் ஸ்ரீஆதிகும்பேஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற்ற ஆருத்ரா தரிசனத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
 | 

ஆருத்ரா தரிசனம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

கும்பகோணம் ஸ்ரீஆதிகும்பேஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற்ற ஆருத்ரா தரிசனத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் பாடல் பெற்றதாகவும் உலகப் புகழ்பெற்ற மகாமகத் பெருவிழாவின்  பிரதான திருக்கோயிலாகவும் விளங்குகிறது. சிவாலயங்களில் ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதம் திருவாதிரையன்று இரவு ஸ்ரீநடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும் அதிகாலையில் ஆருத்ரா தரிசனமும் நடைபெறும். சென்னையில் நவ நடராஜர் சந்திப்பு உற்சவமும், அச்சிறுப்பாக்கம் மற்றும் மயிலாடுதுறையில் பஞ்ச நடராஜர் சந்திப்பு  உற்சவமும், மன்னார்குடியில் ஸப்த(ஏழு) நடராஜர் சந்திப்பு உற்சவமும் என தமிழகத்தில் சில முக்கிய தலங்களில் மட்டுமே திருவாதிரை உற்சவத்தின்போது இந்த நடராஜர் சந்திப்பு உற்சவம் நடைபெறுகிறது.

ஆனால் கும்பகோணத்தில் மட்டுமே 12 சிவாலய ஸ்ரீநடராஜர் சந்திப்பு உற்சவம் நடைபெறுகிறது.  அதன்படி இந்த ஆண்டு ஆருத்ரா தரிசன விழா,  இன்று அதிகாலை 5 மணி அளவில் ஆருத்ரா  நடைபெற்றது. தொடர்ந்து காலை 7 மணி அளவில் இந்திர விமானத்தில் ஸ்ரீசிவகாமி அம்பிகா சமேத ஸ்ரீநடராஜப் பெருமானின் இரட்டை வீதி உலா நடைபெற்றது.

பின்னர் கும்பேஸ்வரர் கீழ ரதவீதியில் நாகேஸ்வரர் கோயில், காசி விஸ்வநாதர் கோவில், கௌதமேஸ்வரர் கோவில், பாணபுரீஸ்வரர் கோவில், சோமேஸ்வரர் கோவில், அபிமுகேஸ்வரர் கோவில், கோடீஸ்வரர் சுவாமி கோவில் உள்ளிட்ட 12 சிவாலய நடராஜர் சந்திப்பு உற்சவம் நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீஆதிகும்பேஸ்வர நடராஜ பெருமானுடன் சந்திப்பு  வைபவமும், மரியாதை சம்பிரதாயங்களும் நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP