பொன்னமராவதி சம்பவத்தில் தொடர்புடைய ஒருவர் திருச்சி விமானநிலையத்தில் கைது!

பொன்னமராவதி சம்பவத்தில் தொடர்புடைய ஒருவர் சிங்கப்பூரில் இருந்து திருச்சி வருவதாக வந்த தகவலையடுத்து போலீசார் காத்திருந்து அவரைக் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் புதுக்கோட்டை மாவட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 | 

பொன்னமராவதி சம்பவத்தில் தொடர்புடைய ஒருவர் திருச்சி விமானநிலையத்தில் கைது!

பொன்னமராவதி சம்பவத்தில் தொடர்புடைய ஒருவரை திருச்சி விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். 

தஞ்சை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட ஒர் சுயேட்சை வேட்பாளரின் சமூகத்தைக் கிண்டல் செய்தும், அந்த சமூகத்து பெண்களை அவதூறாகப் பேசிய இரு இளைஞர்கள், அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். இது கடந்த 19ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொன்னமராவதி வட்டத்திற்குட்பட்ட பகுதியில் இரு சமூகத்தினிரிடையே பெரும் போராட்டம் உருவாகக் காரணமாக அமைந்தது.  

போராட்டத்தின் போது நடைபெற்ற கல்வீச்சில் 3 போலீசார் உட்பட 13 பேர் காயமடைந்தனர். இதையடுத்து போலீசார் தடியடி நடத்தியும், துப்பாக்கிச் சூடு நடத்தியும் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதை தொடர்ந்து வீடியோ வெளியிட்ட 2 இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர். 

இந்நிலையில், பொன்னமராவதி சம்பவத்தில் தொடர்புடைய ஒருவர் சிங்கப்பூரில் இருந்து திருச்சி வருவதாக விமான நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்றிரவு விமான நிலைய போலீசார் காத்திருந்து ஸ்கூட் விமானத்தில் வந்த  புதுக்கோட்டை மாவட்டம் நெருஞ்சி பட்டியை சேர்ந்த முனியன் என்பவரது மகன் சத்யராஜ்(30) என்பவரை கைது செய்து புதுக்கோட்டை மாவட்ட போலீசாரிடம் ஒப்படைத்தனர்.  தொடர்ந்து சத்யராஜிடம் புதுக்கோட்டை போலீசார்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP