சேலத்தில் முப்படை வீரர் கொடி நாள் வசூல்: ரூ.1.5 கோடி

முப்படை வீரர்களின் அரும்பணிகளையும், தியாகத்தையும் போற்றும் நாளாக கடைபிடிக்கப்படும் முப்படை வீரர் கொடி நாள் சேலம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் இன்று கொண்டாடப்பட்டது. அப்போது பேசிய மாவட்ட ஆட்சியர் ரூ.1.50 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
 | 

சேலத்தில் முப்படை வீரர் கொடி நாள் வசூல்: ரூ.1.5 கோடி

சேலத்தில் முப்படை வீரர் கொடி நாள் வசூலாக ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரோகிணி தெரிவித்துள்ளார். 

இந்தியாவின் முப்படை வீரர்களின் அரும்பணிகளையும், தியாகத்தையும் போற்றும் நாளாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7ம் தேதி  முப்படை வீரர் கொடி நாளாக இந்திய அரசும், மாநில அரசுகளும் கடைப்பிடிக்கின்றன. கொடி நாளை முன்னிட்டு, கொடி விற்பனையின் மூலமும் நன்கொடைகள் மூலமூம் திரட்டப்படும் நிதி, படைவீரரின் குடும்பத்தினரின் நல்வாழ்வுக்காகவும், உடல் உறுப்புகளை இழந்த வீரர்களின் மறுவாழ்வுப் பணிகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

அதன்படி, இன்று நாடு முழுவதும் கொடி நாள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடி நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அப்போது பேசிய மாவட்ட ஆட்சியர் ரோகிணி, கொடி நாள் வசூலாக இதுவரை சுமார் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP