கோழியை காப்பாற்ற முயன்ற ராணுவ வீரர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு...

மணப்பாறை அருகே விடுமுறைக்கு வந்த இராணுவ வீரர் கோழியை காப்பாற்ற முயன்றபோது கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 | 

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் ஜான்பீட்டர் (35). இவர் பஞ்சாப் மாநிலம் பதான்கோட் பகுதியில் இராணுவ வீரராக பணியாற்றி வந்தார். தற்போது ஒருமாத கால விடுமுறைக்காக வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில், அவரது வீட்டில் உள்ள சுமார் 70 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் கோழி தவறி விழுந்துள்ளது.

அதை காப்பாற்றுவதற்காக ஜான்பீட்டர் கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கியுள்ளார். பின்னர் கோழியை மீட்டு மேலே ஏற முயன்ற போது திடீரென மேலிருந்து தவறி விழுந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை கயிறுகட்டி மீட்க முயன்றனர்.

கோழியை காப்பாற்ற முயன்ற ராணுவ வீரர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு...

பின்னர் தகவலறிந்து வந்த 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் மற்றும் இளைஞர்கள் அவரை மீட்டு மேலே கொண்டு வந்து சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP