இடைத்தேர்தல் முதலமைச்சரின் கைகளுக்கு வலுசேர்க்கும்: அர்ஜூன் சம்பத்

தமிழகத்தில் வருகின்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என்றும், அது தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கைகளுக்கு வலுசேர்க்கும் எனவும் இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.
 | 

இடைத்தேர்தல் முதலமைச்சரின் கைகளுக்கு வலுசேர்க்கும்: அர்ஜூன் சம்பத்

தமிழகத்தில் வருகின்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என்றும், அது தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கைகளுக்கு வலுசேர்க்கும் எனவும் இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார். 

சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழகம் முழுவதும் உள்ள இந்து கோவில்களுக்கு சொந்தமான சொத்துக்களை அனுபவித்து கொண்டிருப்பவர்களுக்கு பகிர்ந்து கொடுத்துவிடலாம் என்ற அரசாணையை திரும்ப பெறவேண்டும், இஸ்லாமியர்களின் கோவிலுக்கும், கிறிஸ்தவர்களின் சர்ச்சுக்கு சொந்தமான சொத்துகளை ஆக்கிரமிப்பு செய்தால் அதைபறிமுதல் செய்து அந்ததந்த கோவிலுக்கு ஒப்படைத்துவிடுவது வழக்கமாக உள்ளது என குறிப்பிட்டார். 

தமிழகத்தில் அனைவரும் தமிழ் படிக்கவேண்டும், மொழி சிறுபான்மை காரணத்தை கருத்தில்கொண்டு முஸ்லீம் மற்றும் கிறிஸ்துவர்கள் தமிழ் படிப்பது கிடையாது. இச்செயல் தமிழுக்கு இழைக்கப்பட்ட அநீதி, இதற்கு காரணம் திமுக தான், அனைவரும் தமிழ் படிக்கவேண்டும் என சட்டம் அமல்படுத்தவேண்டும்.

காஷ்மீர் தீவிரவாதிகளின் ஆதரவாக சீக்கியர்கள் என்ற போர்வையில் டெல்லியில் நடைபெற்ற பேரணியில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் கலந்து கொண்டார், ஏற்கனவே ஜேகே எல் எஃப் தலைவர் யாசின் மாலிக்கை தமிழகத்தில் தமிழகத்திற்கு அழைத்து வந்துள்ளார். தொடர்ந்து இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிராக செயல்பட்டு வரும் நாம் தமிழர் கட்சியை தடை செய்ய வேண்டும்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் லண்டன் நியூயார்க் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றபோது இந்திய சமூகத்தின் மீதும், தமிழ் சமூகத்தின் மீதும் ஜாதி வெறி பிடித்த சமூகம் எனக்கூறி அங்குள்ள மக்களிடம் நிதி திரட்டி வந்துள்ளார். ஆகவே அவரின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும் என கூறினார்.

சென்னை பல்கலைக்கழகத்தில் பகவத்கீதை விருப்பப்பாடமாக வைத்துள்ளதை வரவேற்பதாகவும், மேலும் தமிழகம் முழுவதும் விருப்பப்பாடமாக பகவத் கீதையை கொண்டு வரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

சீன அதிபர் வருகை குறித்து செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த அவர், சீன அதிபர் வருகையை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம் ஏனென்றால் தமிழகத்தில் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் சீன பட்டாசுகளால் பட்டாசு உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிப்படைவதாக கூறினார். தொடர்ந்து திபெத் மக்களை சீனா கொத்தடிமைகளாக வைத்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது எனவும் கூறினார்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP