பேராயர் எஸ்ற.சற்குணம் மீது அவதூறு வழக்கு!

இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்தவர்களை கொச்சைபடுத்தும் வகையில் பேசியதாக பேராயர் எஸ்ற.சற்குணம் மீது பாமக சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
 | 

பேராயர் எஸ்ற.சற்குணம் மீது அவதூறு வழக்கு!

இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்தவர்களை கொச்சைபடுத்தும் வகையில் பேசியதாக பேராயர் எஸ்ற.சற்குணம் மீது பாமக சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பொன்பரப்பி கலவரத்தை கண்டித்து கடந்த மாதம் வள்ளுவர் கோட்டத்தில் விசிக சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பேராயர் எஸ்ற.சற்குணம் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்தவர்களையும், பாமக நிறுவனர் ராமதாஸையும் கொச்சைபடுத்தி பேசியதாக பாமக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இந்நிலையில், பாமக குறித்து தவறாக பேசிய பேராயர் எஸ்ற.சற்குணம் மீது குற்ற நடவடிக்கை எடுக்க கோரியும், 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க கோரியும் பாமக தேர்தல் பணிக்குழு செயலாளர் ஞானசேகரன் எழும்பூர் 5வது குற்றவியல் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்..

இந்த வழக்கு வரும் 20-ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP