8 வழிச் சாலை திட்டம் ரத்து தொடர்பான மேல்முறையீடு பற்றி யோசிக்கவில்லை: ஜெயக்குமார்

சென்னை - சேலம் 8 வழிச் சாலை திட்டம் ரத்து தொடர்பான மேல்முறையீடு பற்றி இன்னும் யோசிக்கவில்லை எனவும் விவசாயிகள் நலனை பாதுகாக்கும் வகையில்தான் தமிழக அரசின் நடவடிக்கை இருக்கும் எனவும் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்
 | 

8 வழிச் சாலை திட்டம் ரத்து தொடர்பான மேல்முறையீடு பற்றி யோசிக்கவில்லை: ஜெயக்குமார்

சென்னை - சேலம் 8 வழிச் சாலை திட்டம் ரத்து தொடர்பான மேல்முறையீடு பற்றி இன்னும் யோசிக்கவில்லை என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், விமர்சனங்கள் ஆரோக்கியமான முறையில் இருந்தால் வரவேற்கலாம். இந்த தேர்தலில் தனி நபர் விமர்சனம் என்பது அதிகளவில் வந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி திமுக தான் தனி நபர் விமர்சனத்தை மேற்கொண்டு வருகின்றனர். 

நதி நீர் இணைப்பு என்பது அதிமுகவின் நீண்ட நாள் கோரிக்கை. அந்த வகையில் பாஜக தேர்தல் அறிக்கையில் நதி நீர் இணைப்பு குறித்து அறிவித்து இருப்பது வரவேற்கத்தக்கது. மேலும் நடிகர் ரஜினிகாந்த் பாஜக தேர்தல் அறிக்கையை ஆதரித்து இருப்பது வரவேற்க கூடிய ஒன்று என்றும், 8 வழி சாலையில் விவசாயிகள் நலன் பாதுகாக்கும் வகையில் தான் அரசின் நடவடிக்கை இருக்கும் எனவும் கூறினார். 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP