அண்ணா பிறந்தநாள்: திமுக, அதிமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை

பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளையொட்டி கும்பகோணத்தில் அதிமுக மற்றும் திமுக நிர்வாகிகள் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
 | 

பேரறிஞர் அண்ணாவின் 111வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கும்பகோணத்தில் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஊர்வலமாக சென்று மகாமகக்குளம் அருகே உள்ள அண்ணாவின் முழு திருவுருவ சிலைக்கு மாலை  அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில், சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், நகரச்செயலாளர் தமிழழகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

இதேபோல், அதிமுக சார்பில்  நகர செயலாளர் ராமநாதன், ஒன்றிய செயலாளர் அறிவழகன் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காந்தி பூங்காவில் இருந்து ஊர்வலமாகச் சென்று மும்மூர்த்தி விநாயகர் திருக்கோவில் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP